அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PARAIYANA YESUVAE

அடைக்கலப் பாறையான இயேசுவே
அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசையா (2)

தாயின் வயிற்றினிலே
பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)
பிறப்பிலும் வாழ்விலும்
நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)
எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல

போகும் வழியை விசாலமாக்கி
என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)
உயரமான இடத்திலே என்னை
நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2)
என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல

https://www.youtube.com/watch?v=oHvljbRi8WQ

Leave a Comment