அற்புதம் அற்புதம் இதுதான் – Arputham Arputham Ithuthan lyrics

அற்புதம் அற்புதம் இதுதான்
அண்ணல் இயேசுவின் மகிமைதான்
ஆனந்தமாக நாம் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடிடுவோம் – அற்புதம்

1. ஏசாயாவின் வாக்கு நிறைவேற
ஏசுபரன் இனி வந்திடுவார்
எனக்காக உயிர் தந்தவர்
இத்தரணியை ஆண்டிடுவார் – அற்புதம்

2. ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தக்கண்டீர் – இனி
அல்பா ஒமேகா நிற்கக் காண்பீர்
நியாயம் தீர்க்க வந்திடுவார்
நித்திய ஜீவனையும் தருவார் – அற்புதம்

3. பரிசுத்த ஸ்தலத்தில் இடமுண்டு – அங்கே
பக்தர்கள் மத்தியில் பங்குண்டு
இன்னல்கள் இனி இல்லை
இன்பமாக வாழ்ந்திடுவோம் – அற்புதம்

Leave a Comment