அலையமலையாய் அலையினூடே – AalayaMalaiaai Aalayinode lyrics

அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா
சரணங்கள்
1. அலைகடலில் மீன் பிடிப்போரே – நீ
வலை கிழிய மீன் பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ உன்
வலையை வலப்புறமே வீசவா – அலை
2. அலைகடலைக் கடந்து சென்றோரே – நீ
வலைகளிலே சிக்கி விட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை – பார்
விலைமதியா விடுதலையுண்டே – அலை
3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ – பார்
மலைகளிலே மாளும் மாந்தரை
அலையலையாய் மாந்தர் செல்கின்றார் – உன்
வலையுடனே வேகமாக வா – அலை

Leave a Comment