இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi solveer

1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர்,
என் நெஞ்சில் பதியவே;
உள்ளன்பு பொங்கக் கூறுவீர்
சந்தோஷ செய்தி அதே!
பாலனை வாழ்த்த விண்தூதர்
கூடியே ஆர்ப்பரித்தார்
விண்ணில் பிதாவுக்கே மேன்மை
பூமியில் சினேகம் என்றார்
பல்லவி
இயேசுவின் நற்செய்தி சொல்வீர்
என் நெஞ்சில் பதியவே;
உள்ளன்பு பொங்கக் கூறுவீர்
சந்தோஷ செய்தி அதே!
2. நாற்பது நாள் தீய காட்டில்
சோதனையால் தவித்தார்;
படாத பாடுகள் பட்டார்,
சாத்தானையோ ஜெயித்தார்;
யாருக்கும் நன்மைகள் செய்து
சுற்றியே திரிந்தனர்,
பாவிகளால் தள்ளப்பட்டு
கஸ்திகள் அடைந்தனர் – இயேசுவின்
3. மீட்பர் தம் சிலுவை மீதில்
தொங்கியே ஜீவன் விட்டார்;
உயிர்தெழுந்தே மோட்ச வீட்டில்
என்றும் வீற்றாளுகிறார்;
ஆ! இந்த அன்பே பேரன்பு
எந்தனை மீட்டுக் கொண்டார்
ராஜாதி ராஜாவைப் போற்றும்!
அன்பின் சொரூபியானார் – இயேசுவின்

Leave a Comment