முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்
நம்பிக்கையற்ற ஓர் பெலவீனன்
தோல்வி மறைக்காமல்
சுயம் உடைக்கின்றேன்
மன்னிப்பு அளிப்பார்
மன்னிக்கிறார்
சாதித்ததொன்றில்லை ஒன்றுமில்லை
அவரில்லாவிடில் யாவும் வீணாம்
சுயம் துாளாகட்டும்
திட்டம் அமையட்டும்
என் உள்ளத்தில் வாரும்
இரட்சகரே
என் திறமைகளை பயன்படுத்தும்
நீர் என்னில் செய்வதை மறுக்கவில்லை
எனக்குள்ள யாவும்
நம்புகின்ற யாவும்
நீர் எடுத்திட நான்
பின் செல்லுவேன்