இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை -Yesu pugalnthar Irandukaasai

பல்லவி
இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை – போட்ட
எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து
அனுபல்லவி
இயேசு காணிக்கைப்பெட்டிக் கெதிரில் உட்கார்ந்து
எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து
சரணங்கள்
1. தனவான்கள் தமக்குள் சம்பத்தில் சிலதட்ட
கனவான்கள் பெரியோர்கள் கனபணங்களைக் கொட்ட
தனக்குள்ள யாவையும் சமூலமா யீந்திட்ட
மனப்பூர்வமான மனதினைக் கூர்ந்திட்ட – இயேசு
2. விசனம் கட்டாயமாய் விரைவதகல் முற்றும்
வசையுற ஒன்றையும் வழங்காதே நீ சற்றும்;
கபடற்ற ஆபேலின் தன்மையைப் பின்பற்றும்
பிசகுறா நண்பர்கள் பேரில் தயையுறும் – இயேசு
3. பொற் பரத்தில் தமக்குப் பொக்கிஷங்களைச் சேர்க்கும்
நற்குணருக்கு வெகு நன்மைகளை யளிக்கும்
கர்த்தருக் கிதயத்தைக் காணிக்கையாய் படைக்கும்
உற்சாகத்தோரிடம் பாசமாக வசிக்கும் – இயேசு

Leave a Comment