இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarae Jebikirom

1. இரட்சகரே ஜெபிக்கிறோம்,
எக்காலமும் உம்மை விடோம்;
உமதன்பால் மீட்கப்பட்டோம்,
உமக்கே எமைப் படைத்தோம்
2. போர் செய்ய எமை அழைத்தீர்
சேர்ந் தொன்றா யிதோ நிற்கின்றோம்;
தீ தொழித்துன் திவ்ய ராஜ்யம்
ஸ்திரமாக்குவ தெம் நோக்கம்
3. கீதம் பாடும் இவ் வேளையில்
நாதா! உம்மை வாழ்த்துகிறோம்;
நீரே எம் எல்லாம் ஆதலால்
போரை வெல்வோம் அல்லால் சாவோம்
4. யுத்த பெலன் உம் சக்திதான்
கர்த்தன் தீபம் முன் செல்லுந்தான்
சுத்த ஆவியை இப்போதே
சொரிந்தும் சித்தங் காட்டுமேன்
5. உம் கொடியின் கீழ் நிலைத்து
உம் சித்தமே யாம் புரிந்து;
பொன் முடியாம் பெறும் வரை
திண்ணம் விடோம் போர்தனை யாம்

Leave a Comment