இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil

1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன் (2)

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார்

3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார்

Leave a Comment