உம்மை நம்பி சந்தோஷித்தேன் – Ummai Nambi Santhosithen Iyya

உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயா
உம்மை நம்பி கெம்பீரித்தேன் ஐயா
உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயா
என்னைக் காப்பாற்றும் என் தெய்வமே

1. கர்த்தாவே உம்மை நம்பினேன்
ஒருபோதும் வெட்கம் அடையாமல்
உமது நீதியின் நிமித்தம்
என்னை விடுவித்தருளும் ஐயா

2. சிங்கக்குட்டி பட்டினியாய் இருந்து
தாழ்ச்சி அடைந்து போனாலும் கூட
கர்த்தரை தேடுவோர்க்கென்றும்
ஒன்றுமே குறைவதில்லை

3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருக்கிறார்
நான் தாழ்ந்து போகவே மாட்டேன்
புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தும்

4. கருணை தெய்வத்தை நம்பினேன்
காருண்ய கர்த்தரை நம்பினேன்
காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் என் தெய்வமே
எனக்கு இரக்கம் செய்யும் ஐயா

Leave a Comment