க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya


க்ஷேமத்தை தாருமைய்யா
க்ஷேமத்தை தாருமைய்யா (2)
இந்திய தேசத்திற்கு
க்ஷேமத்தை தாருமைய்யா (2)

என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமே
வேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (2)
பாவங்கள் சாபங்கள் போக்கிடுமே
தேசத்தை பரிசுத்தமாகிடுமே
உந்தன் வல்லமையாலே
உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை

லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமே
ஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (2)
அரசியல் தலைவர்கள் மாறனுமே
தேசத்தை ஆளுகை செய்யனுமே
உந்தன் வல்லமையாலே
உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை

தேசத்திலே செழிப்பைத் தந்திடுமே
நிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (2)
தொழில்களும் வளங்களும்
சிறக்கட்டுமே
தேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமே
உந்தன் வல்லமையாலே
உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை

Leave a Comment