பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar

பேரன்பர்இயேசு நிற்கிறார்
மகா வைத்தியனாக
கடாட்சமாகப்  பார்க்கிறார்
நல் நாமம் போற்றுவோமே

பல்லவி

விண்ணில் மேன்மை பெற்றதே
மண்ணோர்க் கின்பமாகவே
பாடிப்போற்றும் நாமமே
இயேசு என்னும் நாமம்
உன் பாவம் யாவும் மன்னிப்பேன்
அஞ்சாதே என்கிறாரே;
சந்தேகங் கொண்டு சோர்வதேன்?
மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்
உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே
மேன்மை உண்டாவதாக!
நேசிக்கிறேன் இயேசு நாமம்
நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில்
குற்றம் பயம் நீக்கும் நாமம்
வேறில்லை இயேசுவே தான்!
என் ஆத்மா பூரிப்படையும்
அந்நாமம் கேட்கும்போது – விண்ணில்

Leave a Comment