அரணான நகரம் – Aranana Nagaram
LYRICS:
அரணான நகரம் நமக்குண்டு பெலனான நகரம் நமக்குண்டு (2)
இரட்சிப்பையே அதற்கு (2)
அரணுமாக மதிலுமாக ஏற்படுத்தின தேவன் (2)
சத்தியத்தைக் கைக்கொள்ளும் நீதியுள்ள ஜாதிகளே (2)
உட்பிரவேசிக்கும் வாசல்களை தேவன் உனக்காய் திறக்கின்றாரே (2)
கர்த்தரையே என்றென்றும் நம்பி வாழ்ந்திடும் ஜாதிகளே (2)
கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருப்பார் (2)
உயரத்திலே வாசம் செய்யும் யாவரையும் தள்ளுகிறார் (2)
சிறுமையானவனின் அடிகள் நிச்சயமாய் அதை மிதிக்கும் (2)
என் ஜனமே உன் அறைக்குள் சென்று உன்னை பூட்டிக்கொள் நீ (2)
தேவ சினம் கடக்கும் மட்டும் கொஞ்ச நேரம் ஒளிந்துக் கொள் நீ (2)
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் பாக்கியவான் (2)
பூரண சமாதானத்தால் அவனை என்றும் காத்துக் கொள்வீர் (2)
- உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren
- Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை
- Naanum En Veedum En Veettaar Song Lyrics
- கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae
- Nalla Thagappanae – நல்ல தகப்பனே