Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை

1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை
மகா நோவு நிந்தைச் சின்னம் பார்!
அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகை
மீட்க நீசர்க்காய் தியாகமானார்
பல்லவி
நான் பாராட்டுவேன் பூர்வக் குருசை
ஜெய சின்னம் படைக்கு மட்டும்!
பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசை
மாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்!
2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்
என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;
தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்
அதைக் கல்வாரி சுமந்தாரே – நான்
3. அந்தக் கேடாமெனும் அந்தக் குருசின்
அதை பக்தியாய் சகிப்பேன்
அவரோர் நாழிகை அழைப்பார் மாளிகை
அங்கென் மகிமைப் பங்கடைவேன் – நான்

Leave a Comment