Aandava Pirasannamaaki – ஆண்டவா பிரசன்னமாகி

1. ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
ஆசை காட்டும் தாசர்மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்
அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்.
2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்.
3. ஆண்டவா, மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்.
4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே! கடாட்சியும்
பெந்தெ கொஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.

Leave a Comment Cancel Reply

Exit mobile version