Cittu Kuruviyae Pattam Poochiyae – சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே

பல்லவி

சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே
உங்களைப் போலவே
நாங்களும் கூட ஆடிப் பாடுவோம் மனதாலே
மனமெல்லாம் பரவசம் மகிழ்ச்சியில் தனி ரகம்
இறைவனின் கைகளில் இருப்பதனால்
கவலை இல்லாமல் மனம் சிறகடிக்குதே

சரணம் – 1

எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானே
இயேசுவுக்குப் பெருமை
எது வந்த போதும் கலங்கிட வேண்டாம்
குறைகள் நமக்கில்லை

எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானே
இயேசுவுக்குப் பெருமை
எது வந்த போதும் கலங்கிட வேண்டாம்
குறைகள் நமக்கில்லை
அவர் சிறகில் இருப்பதனால் சுமைகள் நமக்கில்லை
அவர் நிழலில் நடப்பதனால் பயமும் ஏதுமில்லை

சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே
உங்களைப் போலவே
நாங்களும் கூட ஆடிப் பாடுவோம் மனதாலே
மனமெல்லாம் பரவசம் மகிழ்ச்சியில் தனி ரகம்
இறைவனின் கைகளில் இருப்பதனால்
கவலை இல்லாமல் மனம் சிறகடிக்குதே

சரணம் – 2

வயல் வெளி மலர்கள் தருகின்ற பாடம்
மனசெல்லாம் சிரிக்கட்டுமே
பறக்கின்ற பறவைகள் தருகின்ற பாடம்
கவலைகள் பறக்கட்டுமே

வயல் வெளி மலர்கள் தருகின்ற பாடம்
மனசெல்லாம் சிரிக்கட்டுமே
பறக்கின்ற பறவைகள் தருகின்ற பாடம்
கவலைகள் பறக்கட்டுமே
இயேசு தரும் இரக்கத்திற்கு அளவுகள் ஏதுமில்லை
இயேசு வரும் நாளினிலே துயரங்கள் நமக்கில்லை
இயேசு தரும் இரக்கத்திற்கு அளவுகள் ஏதுமில்லை
இயேசு வரும் நாளினிலே துயரங்கள் நமக்கில்லை

சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே
உங்களைப் போலவே
நாங்களும் கூட ஆடிப் பாடுவோம் மனதாலே
மனமெல்லாம் பரவசம் மகிழ்ச்சியில் தனி ரகம்
இறைவனின் கைகளில் இருப்பதனால்
கவலை இல்லாமல் மனம் சிறகடிக்குதே

Leave a Comment