En Jeevan Kirsithu Thaamae – என் ஜீவன் கிறிஸ்து தாமே

1. என் ஜீவன் கிறிஸ்து தாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு.
2. நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே
மா சமாதானமாக
பிரிந்துபோவேனே.
3. பாடற்றுப்போம், அந்நாளே
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தாலே
மெய் வாழ்வு தொடங்கும்
4. நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்துபோயினும்
என் ஆவியைத் தள்ளாமல்
உம்மண்டை சேர்த்திடும்.
5. அப்போது நான் அமர்ந்து
என் நோவை மறப்பேன்
உம் சாந்த மார்பில் சாய்ந்து
நன்கிளைப்பாறுவேன்.
6. நான் உம்மைக் கெட்டியாக
பிடித்தும்முடனே
அநந்த பூரிப்பாக
வாழட்டும், இயேசுவே.

Leave a Comment