1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே
இயேசுவிடம் வைத்தேன் முன்னமே;
சிலுவையில் இயேசுவைக் கண்டேன்!
எனக்காய் அப்பாடென்றுணர்ந்தேன்;
நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே!
2. நான் இயேசுவிடம் யாவும் வைக்கிறேன்
மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்;
நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்;
கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்;
வல்லவரில் சார்ந்தால் ஜெயிப்பேன்! தேற்றுவேன்!
3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன்
என்ன நேரிட்டாலும் நம்புவேன்
அன்பின் மார்பில் சாய்ந்து இன்பமாய்
சமாதானம் பெற்று பூர்த்தியாய்
மீட்பரோடு தங்கல் இன்பமே! மோட்சமே!
4. உன் இயேசுவிடம் யாவும் வைத்திடு
ஒன்றும் மறைக்காமல் சொல்லிடு;
லோகம் யாவும் தாங்கி நிற்கிறார்!
ஜீவன் சாவு யாவும் ஆள்பவர்!
உன்மேல் வாஞ்சையாக நிற்கிறார்! வந்து பார்