Kaapaar Unnai Kaapaar – காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்

2. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே

3. தாயின் அறைக்கட்டில் வருமுன்
உனக்காய்த் தம்முயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அவரே அவரே அவரே
அன்பு கொண்டு அழைத்தவரே

4. ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

Kaappaar Unnai Kaappaar
Kaaththavar Kaappaar
Innum inimaelum kaaththiduvaar
Kalangaathae manamae kaaththiduvaar

1. Kanndunnai azhaiththavar karamadhaippaar
Avar kaividaathiruppaar
Aanndugal thorum unakkavar azhiththa
Aasigalai ennnnippaar
Ennnnippaar ennnnippaar ennnnippaar
Endrum adhai ennnnippaar

2. Veelchchiyil viliththunnai meetpavarum
Igalndhuvidaathu serppavarum
Sirsila velaiyil
Sitchayinaalunnaik kittiyiluppavarum
Jeyamum, kanamum, sukamum
Unakkentum azhippavarae

3. Thaayin araikattil varumun
Unakkaayth thaamuyir koduththavarae
Kaayeenaip polunaith thallividaathu
Kai koduththeduththavarae
Avare Avare Avare
Anpu konndu azhaithavare

4. Aatharavaay pala aanndukalil paran
Adaikkalamaayirunthaar
Kaathaludanavar kaippanni seythida
Kanivudan aathariththaar
Thariththaar thariththaar thariththaar
Parisuththaththil alangariththaar

Leave a Comment