1.கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை
2.மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ
3.கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்
4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே
5.சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை