1.மரித்தாரே என் ஆண்டவர்
சிலுவையில்தான்
மரித்தாரே என் ரட்சகர்
ஆ எனக்காகவே
2.சிலுவைமீது ஜீவனை
என் மீட்பர் விட்டாரே
எனக்குத்தான் இப்பலியை
செலுத்தி மாண்டாரே
3.நான் எண்ணி எண்ணி வருகில்
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்
4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்
இவ்வருள் செய்தாரே
நாம் என்ன பதில் செய்யலாம்
ஈடொன்றுமில்லையே
5.என் தேகம், செல்வம், சுகமும்
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன் இயேசுவே