1. மேல் வீட்டை நாடித் தேடுவோம்
வாரீரோ?
மீட்பரின் நேசம் பாடுவோம்
வாரீரோ?
ஏராள ஊரார் இவரால்
இரட்சிப்படைந்தார் ஆனதால்
பாவி என்று உணர்வாரே
வாரீரோ?
2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர்,
வாரீரோ?
இரட்சை யுண்டோ என்று கேட்போர்
வாரீரோ?
இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார்
நீர் நம்பினால் இப்போ அவர்
உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்!
வாரீரோ?
3. சுவர்க்க பாதை நேர்மை செம்மை
வாரீரோ?
செல்வோர் வாழுவார்கள் உண்மை!
வாரீரோ?
நம்பித் தொய்ந்து நீ வந்திடு
இப்போதே காண்பாய் இரட்சிப்பு
என்ற வாக்கை நீர் உணர்ந்து
வாரீரோ?