Nithiyarae Ummai Pattrinean – நித்யரே உம்மைப் பற்றினேன்

1. நித்யரே! உம்மைப் பற்றினேன்
என் தேவே!
மாறாத செல்வமாய்க் கொண்டேன்
கிறிஸ்துவே
என் சற்குருவே இராஜாவே!
ஏழைக்கு இரட்சை தந்தீரே!
பாடித்துதிப்பேன் என்றுமே!
கிறிஸ்துவே!
2. பொன் வெள்ளி மற்றோர் தனமே,
கிறிஸ்துவே!
மாறாத செல்வம் எனக்கே
கிறிஸ்துவே!
உன் பொன் வெள்ளி அழிந்திடும்
உன் கீர்த்தியும் ஒழிந்திடும்
ஆனால் என் செல்வம் ஓங்கிடும்
கிறிஸ்துவே!
3. சௌக்கியமோ தீரா நோயிலும்
கிறிஸ்துதான்!
செல்வமோ தரித்திரத்திலும்
கிறிஸ்து தான்!
இப்பூவை விடும் அந்நாளில்
சாவின் நதி கடக்கையில்
மோட்ச லோகத்திற் கேகையில்
கிறிஸ்துதான்!
4. இராப்பகல் எவ்விடத்திலும்
கிறிஸ்துதான்
ஜெபம் கீதம் போதிப்பிலும்
கிறிஸ்துதான்!
துன்பத்திலென தின்பமும்,
ஆறுதலும் என் கீதமும்
ஆதி அந்தம் எந்நேரமும்
கிறிஸ்துதான்!

Leave a Comment