பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்
சிலுவையில் தொங்கின இயேசு
திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்
பெரும் பாவி எனை இரட்சிக்க

பல்லவி

பெரும் பாவி என்னை இரட்சிக்க (2)
திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்
பெரும் பாவி என்னை இரட்சிக்க

2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச்
சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்!
என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்;
உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும்

3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன்
கல் இருதயத்தை இளக்க
மனஸ்தாபத்தோடு சுவாமி நான் உந்தன்
திருப்பாதத்தைத் தேடி வந்தேன் – பெரும்

4. எப்பேர்க்கொத்த பாவியையும் இரட்சிக்க
ஆம் வல்லவர் எனது மீட்பர்;
உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னை
இவர் சத்தியமாக மீட்பார் – பெரும்

Leave a Comment