1. பாழ் லோகமே போ, அற்பக் குப்பையே
சிறையாக்கி என்னை வஞ்சித்தாயே
உன் கீதம் நான் கேட்டுக் கெட்டேன்
நிர் மூடனாகவே
என் ஆத்மமும் உன்னைச் சேவித்ததே
2. பெருக்கினும் உன் இன்பங்களெல்லாம்
ஓர் ஆன்மத்தைத் தேற்றா அற்பப்புல்லாம்
மெய்யின்பமாம் என் சொந்தமாம்
மோட்சப் பிரயாணி நான்
பாலும் தேனும் கலந்து அங்கென்றும் ஓடுமாம்
3. ஆச்சரியமே இயேசுவின் வேண்டுதல்
ஆம் மெய்யாய் நான் கிருபை பெறுதல்!
மெய் தத்தத்தால் வேண்டுதலால்
என் ஆசை சித்திக்கும்!
அவர் இரத்தம் என்னைப் புதுப்பிக்கும்
4. விழித்திடு துரிதம் உள்ளதே!
அதோ நீ கேள் தேவ எக்காளமே!
வெற்றி பெற மோட்சம் சேர
மெய் யுத்தம் செய்திடு;
மீட்பர் சாட்சி நீ எங்கும் பாடிடு