Partheanae Paranai – பார்த்தேனே பரனை

பல்லவி
பார்த்தேனே பரனை – அவர் அன்பாய்
ஏற்றாரே நரனை
அனுபல்லவி
உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்
சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான்
சரணங்கள்
1. கல்வாரிமலையில் – முண்முடியைச்
சூண்டோராய்த் தலையில்
கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட
வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார்த்தேனே
2. சீஷர்கள் கலங்க – நிலைமாறி
பூதலம் குலுங்க
நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்
கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார்த்தேனே
3. வாதைக்குள் ளானோர் – பேயின் தந்திரப்
பாதைக்குள்ளானோர்
பட வேண்டிய பாட்டைச் சடலந்தனி லன்பாய்
பட்டுச் சிலுவையில் வெற்றி யடைந்தோனை! – பார்த்தேனே
4. ஓடுது இன்று – ஜீவ நதி
பாவிகட்கென்று!
பாவத்தை விட்டிப்போ தாவி இவர் பாதம்
பாவி நீ வந்தால் உன் சாபங்கள் தீர்ந்திடும் – பார்த்தேனே

Leave a Comment