பல்லவி
இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே
சுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமே
தத்தம் தத்தம் செய்திடுமேன்
முற்றிலும் மாற்றிடுவார்
சரணங்கள்
1. பாவியுன்னிருதயம்தனிலே பார்
தேவனின் கிருபையை எண்ணி இப்போ
பாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டு
இயேசுவின் பாதமே எழுந்து செல்லு – இர
2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே,
அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே;
இப்போ முழுவதும் தாழ்த்துவதே
தெய்வத்துக் குகந்திட்ட பலியாமே – இர
3. சூரியன் முன்னே பனி போலும்
காற்றுக்கு முன்னே புகை போலும்
ஆவியின் முன்னே பாவமுமே
காற்றாய்ப் பறந்தது மாய்ந்திடுமே – இர