Tamil Song

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை […]

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae

பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை,

எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae Read More »

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku

பல்லவி எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்குஇப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதாநற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் சரணங்கள் 1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்துஇட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப் 2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்தஉச்சித கற்பனை கடந் திச்சையினாலே,துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்துநிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும்.

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku Read More »

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami

பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே 3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே 4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே 5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே 6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே 7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami Read More »

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவிஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா 3. ஆகாத

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi Read More »

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean

பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! – எத்தனை 3. துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்தொழுது

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து , என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும்

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா Read More »