Tamil Songs

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil

1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன் துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மை நேசித்து சேவிப்பேன்! தாசனென் யாவையுமே தாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன் உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்! நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்!

அன்பரே! நானும்மில் – Anbarey naan ummil Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

1. அனுசரிக்க தேவா அனுதினம் போதியும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன் இன்பம் ஈயும் அதுவே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்ல பார்த்திபா போதித்திடும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தை சாட்சியால் இப்பாருக்கே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன்

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai

1. அற்புத அன்பின் கதை மீண்டும் சொல்லு இதை ஆச்சரியமான அன்பு நித்யமாய் உணர்த்துது தூதர்கள் களிப்பாய் உரைத்தனர் மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர் பாவியே இதை நீ நம்பாயோ? அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்! ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதை அப்பால் நீ இருப்பினும் ஆச்சரியமான அன்பு இன்றும் அழைக்கிறது கல்வாரி மேட்டிலிருந்து கீழே தூயநதி மட்டும் லோகம் உருவாகும் போதும் இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai Read More »

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal

1. அற்புத அற்புதமான ஓர் நாள் நான் மறவாத நல் நாள் இருளில் நான் அலைந்து போனபின் இரட்சகரை சந்தித்தேன்; என்ன மா இரக்கமான நண்பர். என் தேவையை சந்தித்தார்; நிழலை நீக்கி இருளை அகற்றினார்; இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார் இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்; மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால் தெய்வீகக் குடும்பத்தில் கல்வாரி அன்பால்

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal Read More »

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

பல்லவி அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்; மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் கிருபை பெற முற்று மபாத்திரனான போதும் சரணங்கள் 1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும் பலவித மாமிச சிந்தைகளும் பாவி என்னிதயத்தை வதைத்தபோது பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற் 2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்; நீண்ட ஜெபங்களைச் செய்வதினால் மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற் 3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு துன்மார்க்கப் பாதையில்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten Read More »

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae

1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன் மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன் அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்! அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள் 3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம் உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்; உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்! மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள் 4.

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae Read More »

அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல 1. அளவில்லா ஆழிபோல உலகெல்லாம் பொங்குதாம் அது இயேசுவின் நேசமாம்! அங்கலாய்க்கும் பாவியை அருளதாம் ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும் அளவில்லா ஜோதிபோல் இயேசு நாதர் வாக்குத்தத்தம் இலங்கி ஜொலிக்குது; எப்பாவிக்கும் நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றி நித்தம் நாம் முகரும்போல் அத்தனேசு அரும் பாடால் அளித்த இரட்சண்யத்தை அடைவோமே அசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்து தேவ கிருபை மீட்டிடும் சாகுமட்டும் அவர் பெலன் சுத்தமாயென்றும் காக்கும்; போற்றிடுவோம்

அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola Read More »

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ? செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்; வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம்

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu

அவிசுவாசமாய்த் தொய்ந்து 1. அவிசுவாசமாய்த் தொய்ந்து பாவத்தில் ஏன் நிற்கிறாய் நம்பு இப்போ, இரட்சிப்பார் அப்போ! மனதைத் தா நம்பிக்கையாய் பல்லவி இரட்சிக்க வல்லவர் இயேசு, மீட்க வல்லோர் காக்க வல்லோர்! இரட்சிக்க வல்லவர் இயேசு, பாவியை மீட்க வல்லோர்! 2. ஏழை பலவீனன் ஐயோ பாவம் வெல்லு தென்கிறாய்; மெய்தான்! ஆனால் அவரண்டை வந்தால் மீட்டு உன்னைப் பாதுகாப்பார் – இர 3. அவர் என்னை துக்கத்தில் கண்டு அன்பாக சொஸ்தம் செய்தார்; என் இருள்

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu Read More »

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham

அவர் வரும்போது சேனை ஆயத்தம் 1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம் ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம் ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம் 3. அவர் வரும் போது பாவி என்செய்வாய்? என்செய்வாய் ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 4. அவர் வரும்போது மனஸ்தாபம் வீண் வீண் வீண்! ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 5. அவர் வரும் போது பூதம் நடுங்கும் நடுங்கும்! ஆம் இரட்சண்ய

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham Read More »

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah sthothiram

அல்லேலூயா ஸ்தோத்திரம் பல்லவி அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் சரணங்கள் 1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா – அல்லேலூயா 2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய் நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய் வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே – அல்லேலூயா 3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா, மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா! காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah sthothiram Read More »

அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh entru paaduvom

பல்லவி அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த நல்ல மாறுதலைக் கூறுவோம் அனுபல்லவி அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம் சரணங்கள் 1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய் இயேசு இரட்சகரையுங் கண்டோம்; பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல் 2. தேவ அன்பின் வெள்ளப்பெருக்கம் – எப்படிப்பட்ட பாவ வலையையும் அறுக்கும்

அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh entru paaduvom Read More »