Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்

துன்பம் வரும் வேளையில்
துணை கரம் இயேசுவே
இன்பமாய் அதை மாற்றுவீர்
கலக்கம் இல்லையே-2
கண்ணீரில் தவித்தேன் அன்றும்
கரம் நீட்டி தேற்றினீர்
கவலைகள் வேண்டாமே என்று
கண்ணீரை துடைத்தீரே
பாவங்கள் நிறைந்த போதும்
கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்
ஜெபத்தை கேட்டு மறுகனமே
பெலனை தந்து பெலனாக வந்தீர்

தேவைகள் நேர்ந்தாலும்
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்
இயேசு நீர் மாத்திரமே
என் கண்ணீர் கண்டீரே
உம் கரம் தந்தென்னை தாங்கிடுமே

துன்புற்ற வேளையில் சோதனைகள்
எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்
விசுவாசம் நம்பிக்கை மாத்திரமே
உம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரே
எத்தனை நேரிடும் யாவுமே
எல்லாம் உம் சித்தம் தேவனே
பாதை தெரியாத எந்தனுக்கு
வழியை காட்டிடும் இயேசுவே

எத்துன்பம் வந்தாலும்
எத்துயர் சூழ்ந்தாலும்
என்னை நீர் என்றென்றும் கைவிடீரே
விலகாமல் என்னை காத்து
நிலையான சந்தோஷம்
சமாதானம் தந்தென்னை காத்திட்டீரே

https://www.youtube.com/watch?v=sVOCqvF3HNQ

Leave a Comment