UNNADHATHIL UYARNTHAVARE – உன்னதத்தில் உயர்ந்தவரே

1.உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே (2)

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே (2)
இயேசுவே இயேசுவே (2)

2.நீர் என்னை சுமந்ததாலே
தடைகளையும் நான் தாண்டி வந்தேனே
திருக்கரம் தாங்கினதாலே
மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே (2)

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே (2)
இயேசுவே இயேசுவே (2)

3.உலகத்தின் ஆழத்திலே
மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
உந்தன் அன்பின் ஆழத்திலே
இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே (2)

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே (2)
இயேசுவே இயேசுவே (2)

https://www.youtube.com/watch?v=cwpbEajscLM

Leave a Comment