Unnathamaana stalathil – உன்னதமான ஸ்தலத்தில்

1. உன்னதமான ஸ்தலத்தில்
மா ஆழமுள்ள இடத்தில்,
கர்த்தாவே, நீர் இருக்கிறீர்,
எல்லாவற்றையும் பார்க்கிறீர்.
2. என் அந்தரங்க எண்ணமும்
உமக்கு நன்றாய்த் தெரியும்;
என் சுகதுக்கம் முன்னமே
நீர் அறிவீர் என் கர்த்தரே.
3. வானத்துக்கேறிப் போயினும்
பாதாளத்தில் இறங்கினும்,
அங்கெல்லாம் நீர் இருக்கிறீர்,
தப்பாமல் கண்டுபிடிப்பீர்.
4. காரிருளில் ஒளிக்கினும்,
கடலைத் தாண்டிப் போயினும்
எங்கே போனாலும் தேவரீர்
அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர்.
5. ஆராய்ந்து என்னைச் சோதியும்,
சீர்கேட்டை நீக்கி ரட்சியும்,
நல்வழி தவறாமலே
நடத்தும் எந்தன் கர்த்தரே.

Leave a Comment