Unnathathirku pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை

உன்னதத்திற்குப் பரற்கு மகிமை உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக
வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப்
பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க
பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம்
தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே
மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே

Leave a Comment