1. வரு பாவியை ஒரு போதிலும்
வெறுக்கார் கிறிஸ்தேசு
திருவானவர் அருளால் உந்தன்
கறை நீங்கிட மீட்பார்
2. பாவி உந்தன் மீட்பரண்டை
தாவி ஓடி வருவாய்;
கூவி அவர் பாதம் வந்து
தாவி மீட்பைப் பெறுவாய்
3. நாடி வரும் பாவிகளை
ஓடு என முடுக்கார்
பாடி மகிழ் கொள்ள மன
மாறுதலை அளிப்பார்
4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்
கந்தை யென்றுணரேன்
எந்தன் இயேசு மீட்பர் பாதம்
வந்து மனம் மாறேன்