யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
இறைவா……. இறைவா……. (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)
அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய் (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)
மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதைய்யா (2)
குணமதிலே மாறாட்டம்
குவலயம் தான் இணைவதெப்போ (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)
வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு
உனது மனம் இரங்காதோ (1)
(யாரிடம் செல்வோம் இறைவா…….)