எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே
2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர — எங்கே
5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் — எங்கே
6. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ — எங்கே
7. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து — எங்கே
- Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல
- உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren
- Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை
- Naanum En Veedum En Veettaar Song Lyrics
- கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae
எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer