இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா
என்னும் உம் அப்போஸ்தலர்
ஒன்று சேர்ந்து உமக்காக
உழைத்த சகோதரர்
தங்கள் வேலை ஓய்ந்த போது
வெற்றி கிரீடம் பெற்றனர்
அவர்கள் உம் அருளாலே
நேசத்தோடு போதித்தார்
சபையில் முற்கால் பல
அற்புதங்கள் காண்பித்தார்
மார்க்கக் கேடுண்டான வேளை
எச்சரித்துக் கண்டித்தார்
சீமோன் யூதாபோன்ற உந்தன்
பக்தர் பல்லோருடனும்
பளிங்காழி முன்னே நாங்கள்
உம்மைப் போற்றும் அளவும்
சாவுக்கும் அஞ்சாமல் உம்மை
பற்ற ஏவி அருளும்
அற்புதங்கள் செய்யும் வல்ல மா பிதாவே,
ஸ்தோத்திரம் நீதி சத்தியமும்
நிறைந்த மாந்தர் வேந்தே,
ஸ்தோத்திரம் தூய ஆவியே,
என்றைக்கும் உமக்கெங்கள் ஸ்தோத்திரம்