இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal

பல்லவி

இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில்
வருவாய், அருள் தருவாய்

அனுபல்லவி

நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்து
பாராய் எமைக் காராய்

சரணங்கள்

1. சங்கீதம் பாடியே உம்மை அடியார்கள்
போற்ற மகிழேற்ற
தற்பரனே உந்தன் அற்புத ஆவியைத்
தருவாய் அருள் புரிவாய் – இயேசு

2. அம்பரனே! மனுத் தம்பிரானே! இங்கே
வருவாய் வரம் தருவாய்;
அல்லேலூயாவென்று ஆனந்தப்பாட்டுடன்
பாட உம்மைத் தேட – இயேசு

3. பெந்தெகொஸ்தின் நாளில் அற்புதமாய் வந்த
பரனே! எங்கள் அரணே;
பேதைகளான எம்மீதினில் வந்து நீர்
பேசும் அருள் வீசும் – இயேசு

Leave a Comment