Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட

1. இயேசுவே, நான் நீர் பட்ட
பாடும் வேதனையும்
கருத்தாய்த் தியானிக்க
உமதாவியையும்
பக்தியையும் தயவாய்
தந்தென் மீட்புக்காக
வதையுண்ட ரூபமாய்
என்முன் நிற்பீராக.
2. நீரே பட்ட துயரம்
ரத்த வேர்வை கட்டு
கும்டுமிழ்நீர் தூஷணம்
வாரடி இக்கட்டு
சிலுவையின் மரணம்
பாடெல்லாவற்றையும்
அடியேனின் இதயம்
உற்றுப் பார்த்தசையும்.
3. இந்தப் பாட்டைப் பார்ப்பதும்
அன்றி, அதற்கான
காரணமும் பலனும்
ஏதேதென்று காண
உதவும்; என் பாவத்தை
அத்தால் தீர்த்துவிட்டீர்,
எனக்காகக் கிருபை
நீர் அவதரித்தீர்.
4. இயேசுவே, நான் உத்தம
மனத்தாபமுற்று
தேவரீரை வாதித்தப்
பாவத்தை வெறுத்து
நீக்க எனக்கன்பினால்
துணை செய்து வாரும்,
மீண்டும் உம்மைப் பாவத்தால்
வாதிக்காமல் காரும்.
5. பாவம் மனச் சாட்சியைக்
குத்தி, தீக்காடாக
எரியும் நரகத்தைக்
காட்டும்போதன்பாகத்
துணை நின்றென் நெஞ்சிலே
உம்மைப பற்றிப்கொள்ளும்
விசுவாசத்தை நீரே
தந்து திடன் சொல்லும்.
6. நான் என் சிலுவையையும்
களிப்பாய்ச் சுமந்து,
தாழ்மை பொறுமையையும்
உம்மால் கற்று வந்து,
உம்மை பதில் நேசிக்க
உமவும்; நான் சொல்லும்
இத்துதிக் கும்முடைய
செவிசாய்த்துக் கொள்ளும்.

Leave a Comment