1. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்
ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?
ஏனெனில் என் நேச மீட்பர்
என் பாவநிவிர்த்தி செய்திட்டார்
பல்லவி
ஆகையால் நான் நேசிக்கிறேன்
அன்பு செலுத்துகிறேன்
என் மீறுதல்கள் மன்னித்தார்
வெண்மையாய்க் கழுவினார்
2. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்
ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?
ஏனெனில் இயேசுவின் இரத்தம்
இரட்சித்து சுத்திகரிக்குது
3. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்
ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?
ஏனெனில் சோதனையினூடே
சக்தியூட்டி ஆதரிக்கிறார்
4. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்
ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?
ஏனெனில் போராட்டத்திலும்
இயேசு ஜெயம் தருகிறார்
5. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்
ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?
ஏனெனில் நண்பர் மீட்பராய்
அவர் என்றென்றுமாயிருப்பார்