உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி
உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்
எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே
என் ஆண்டவா என் இயேசுவே
என் மீட்பரே ஆராதனை
சரணம் I
ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்
பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2
தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை
இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்
இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன்
சரணம் II
ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
வழி திறக்கும் வழியும் நீரே எனை மறவா தேவன் நீரே – 2
துதிகளில் வாசம் செய்பவரே ஆராதனை ஆராதனை
உம் திருநாமம் ஏற்றிடுவேன் சிலுவையின் நிழலில் வாழ்ந்திடுவேன்

Leave a Comment