எந்தன் உள்ளம் புது கவியாலே

R-80’s Fusion T-120 C 2/4

1.எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்

2.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா

3.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா

4.பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா

5.களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா

Leave a Comment