எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே

என் நேசரே என் மேய்ப்பரே
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

1. உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – என் நேசரே

2. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே

3. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர் – என் நேசரே

4. கல்வாரி எனக்காக
காயங்கள் எனக்காக
திரு இரத்தம் எனக்காக
சிந்தியே ஜீவன் தந்தீர் – என் நேசரே

https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/654247718110776

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

Leave a Comment