MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS

1. மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு

5. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே — ஆ! இயேசு

6. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே — ஆ! இயேசு

Maaridaa Em Maa Neasarae – Aa
Maaraathavar Anpennaalumae
Kalvaari Siluvai Meethilae
Kaanuthae Immaa Anpithae

Aa Yesuvin makaa Anpithae
Athan Aalam ariyalaakumae
Itharkinnaiyeathum vearillaiyae
Inai Yethum vearillaiyae

Paaviyaaka Irukkaiyilae Anpaal
Paaril Unnai Thedi vanthaarae
Neesan Entunnai Thallaamalae
Neasanaaka Maattidavae

Ullathaal Avarai Thallinum Tham
Ullam Pol Neasithathinaal
Allal Yaavum Akattidavae
Aathi Thaevan paliyaanaarae

Aaviyaal Anpai Pakarnthida Thooya
Theavanin vin saayal Aniya
Aaviyaalae Anbai Sorinthaar
Aavalaay Avarai Santhikka

Niyaayavithi Thinamathilae Neeyum
Nilaiyaakum Thairiyam Peravae
Pooranamaai Anpu Peruka
Punniyarin Anpu Vallathae

Bayamathai Neekkidumae Yaavum
Paarinil Sakithidumae
Athu Visuvaasam Naadidumae
Anbu Orukaalum Oliyaathae

https://www.worldtamilchristians.com/enthan-ullam-puthu-kaviyaley-ponga-lyrics/

Leave a Comment