கானக பாதை காடும் மலையும்-kaanaga pathai kadum malaiyum

கானக பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன் செல்லுவாய்

பயப்படாதே கலங்கிடாதே
பாரில் இயேசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தே
இயேசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன் செல்வாய்

கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய்

குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்
காணுவாய் பேரீச்ச மரம்
கன்மலையில் தாகம் தீர்த்து
மன்னா ருசித்தும் முன் செல்லுவாய்

கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பி சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன் செல்லுவாய்

கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன் செல்லுவாய்

kaanaga pathai kadum malaiyum
karirule suzhnthidinum
Mekasthampam Akkini thontrum
Vekam Natanthe mun selluvay

payappadathae kalangkidathae
Paaril Yesu Kaathiduvaar
Parama Kaanaan Viranthu Servaai
Paramanodentrum Vazhnthiduvaai

Ekipthin Paava Vazhvai Veruthae
Yesuvin Pinnae Nadanthae
Thooya Paska Nee pusiththae
Deva Belanaal Mun selluvai

Kadalai Paarum Irandai Pilakkum
Koottamai Sentrae Kadappai
sathru senai muzhki maalum
Jeyam Siranthae Mun Selluvai

Kulirntha Yealeem Panneeruttum
Kaanuvaai Pearissa Maram
Kanmalaiyil Thaagam Theerthu
Manna Rusithum Mun selluvai

Kasantha Maara Unnai Kalakkum
Kastathaal Un Kan soriyum
Pin Thirumbu Sornthidathae
Nanmai Arulvaar Mun Selluvaai

Kodumai yuththam Unnai Madakkum
Koora Yorthan Vanthethirkum
Thaangum Karthar Oongum Kaiyaal
Thukki Sumappar Mun Selluvai

Leave a Comment