எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami
பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே 3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே 4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே 5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே 6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே 7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். […]