துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

துளித் துளியாக தூறிடும் இரவில்
புல்லணை அருகிலே மெல்லிய சத்தம்
குவா குல சத்தம் – அது – 4
1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே
அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை
மண்ணோரின் பாவங்கள் நீக்க
மனுவாக உலகினில் வந்த
மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா
2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே
வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே
இந்த அற்புத பாலன் யாரோ
இந்த அதிசய பாலம் யாரோ
மண்ணிலே வந்திட்ட தேவகுமாரன் – குவா
3.பாலா இயேசு பாலா கனவு நான் காண்கிறேன்
புல்லணை மீதிலே தவழ்ந்திடும் கோலத்தை
உம் பிறப்பின் காட்சியைக் காண
என் உள்ளம் பொங்கியே மகிழ
கேட்குதே கேட்குதே மெல்லிய சத்தம் – குவா

Leave a Comment