Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு

அப்பா பிதாவே உம் அன்பு
முற்றுப் பெறாதே தூயன்பு
முன் ஆதி முதலாய் உம் அன்பு
ஆழ் ஆழம் அறியா பேரன்பு

தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்
விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையே
இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்
இதயம் நிறைக்கப் பிறந்தீர்
இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்
இதயம் நிறைக்க

Chorus:

மகிமை மண்ணில் வந்த மகிமை
மகிமை மண்ணில் வந்த மகிமை
மண்ணில் வந்ததே

1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்று
புத்தம் புது வாக்கால் அரும்பும் பற்று
எண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகை
சிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகை
தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர் – ஒரு முறை
தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற

மகிமை மண்ணில் வந்த மகிமை
மகிமை மண்ணில் வந்த மகிமை

2. தேவனின் ரூபமாய் நீர் இருந்தபோதும்
தேகத்தில் தாங்கினீர் காயங்களின் கோரம்
நாவுகள் யாவும் உம் நாமத்தையே போற்றும்
நானிலத்தின் முழங்கால்களும் முடங்கும்
எல்லா நாமத்திலும் மேலான நாமமே- இயேசு
எல்லா நாமத்திலும் மேலான

மகிமை மண்ணில் வந்த மகிமை
மகிமை மண்ணில் வந்த மகிமை

Leave a Comment