எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்

கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
கருத்துடன் நீர் காத்தீரே-2
கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய்-2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினீரே-2
வழிகளில் நான் இடறி விழாமல்
கருணை கரத்தால் உயர்த்தினீரே-2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையால் என்னை தாங்கினீரே-2
மனிதர் யாவரும் மறந்திட்ட போது
மறவாமல் என்னை நினைத்தவரே-2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

Leave a Comment