ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் கூடாரத்தில் ( சபைகளிலே )
வெற்றி குரல் ஒலிக்கட்டும்

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்

4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன்
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா

Leave a Comment