Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்-2

பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே-2
உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே-கன்மலையே

Leave a Comment